Nepal Pilgrimage
நாங்கள் நேபாளத்திறகு ஆன்மீகச் சுற்றுலா வந்த ஐந்தாம் நாள்.
மனோக்காம்னா கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, மாலை 7 மணி அளவில் மலையிலிருந்து கீழே இறங்க கேபிள் காருக்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருந்தோம். மனோக்காம்னா, காட்மாண்டுவிற்கும் போக்ரா என்ற ஊருக்கும் நடுவில் உள்ளது.
மனோக்காம்னா கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.3 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2.8 கிலோமீட்டர் கேபிள் காரில் செல்ல வேண்டும். 10 நிமிடத்தில் கோவிலை அடைந்து விடலாம். ஒரு கேபிள் காபினில் 6 பேர் அமரலாம். சுமார் 600 நபர்களை ஒரு மணி நேரத்தில் ஏற்றி இறக்குகிறார்கள். ஆசியாவிலேயே மிக பெரிய கேபிள் கார் சேவை வசதி இதுவாகும். 1998ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டார்கள். எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் கேபிள் சேவை நடைபெற தினமும் ஒரு ஆட்டை பலி கொடுக்கிறார்கள். அடுத்த நாள் பலியாக வேண்டிய ஆடு “மே” என்று கத்தாமல் “ஙே” என்று விழித்துக்கொண்டிருந்தது.
கோவிலுக்கு சின்னதாக ஒரு கதை இருக்கிறது. கூர்கா ராஜாவின் ராணி ,அம்பாளின் அவதாரம். ராஜாவுக்கு இந்த விஷயம் தெரியாது. லக்கன் தாபா என்ற பக்தனுக்குத் தெரியும். ஒரு நாள் இரவு ராணியை அம்பாளாக ராஜா காண நேருகிறது. அந்த அதிர்சியில் ராஜா இறந்து விடுகிறான். ராணியும் உடன் கட்டை எறுகிறாள். அம்பாள் லக்கன் தாபா கனவில் மீண்டும் வருவேன் என கூறுகிறாள். பிறகு ஒரு நாள், விவசாயி ஒருவன், நிலத்தை உழும்போது, இரத்தமும் பாலும் பொங்கி வழிகிறது. லக்கன் அந்த இடத்தில் கோவில் கட்டுகிறான். “கேட்டதைக் கொடுக்கும் அம்பாள் “ பார்வதியின் அவதாரம். பகவதி என்று இங்கே அழைக்கிறார்கள்.
கேபிள் காருக்காக வரிசையில் நின்றபடி எங்களுடைய முதல் நான்கு நாட்கள் பயண அனுபவத்தை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
பயணத்தின் முதல் நாள், கோரக்பூர் வழியாக நேபாளத்திற்குள் நுழைந்து. பைரவா என்ற ஊரில் இரவு தங்கினோம்.
இரண்டாம் நாள் காலை, லும்பினி. புத்தர் பிறந்த ஊர். புத்தர் பிறந்த ஏழாம் நாள், அவருடைய தயார் இறந்து விடுகிறார். சகோதரியால் வளர்க்கப் பட்டார். 16 வயதில் யசோதை என்ற பெண்ணுடன் கல்யாணம். ராகுலன் என்ற மகன் பிறக்கிறான். 29 வயதில் ஞானத்தைத் தேடி அரண்மனையை விட்டுச் செல்கிறார். 12 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு கயா (பீகார்) என்ற இடத்தில் , போதி மரத்தடியே ,ஞானம் கிடைத்தது. புத்தரின் தத்துவம் எளிதானது. மனிதனாக பிறந்தால் வாழ்கையில் துன்பம் நிச்சயம் உண்டு. துன்பத்திற்க்கு காரணம் ஆசை. ஆசையை விட்டுவிட்டால் துன்பம் கிடையாது. புத்தமதம் ஆசையை விடச் சொல்கிறது. இந்து மதம் பற்றற்றான் பற்றினை பற்றச் சொல்கிறது. லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தையும், வளர்ந்த இடங்களையும் அகழ்வாராச்சி செய்து நாம் காணுமாறு செய்திருக்கிறார்கள். அசோகர் லும்பினிக்கு விஜயம் செய்திருக்கிறார். அதற்கான அடையாள ஸ்தூபி உள்ளது. லும்பினியிலிருந்து போக்ரா என்ற ஊருக்குச் சென்று ,அங்கு இரவு தங்கினோம்.
மூன்றாம் நாள் காலை , போக்ராவிலிருந்து ஆகாயமார்க்கமாக ஜோம்சம் சென்று அங்கிருந்து சாலை வழியாக முக்திநாத் செல்வதாக திட்டம். அதிகாலை விமானநிலையம் வந்தடைந்தோம். 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் நண்பகல் ஒரு மணி வரை புறப்படவில்லை. மேகமூட்டம், அதிகமான காற்று என காரணங்கள். சுமார் 1.30 மணிக்கு விமானச் சேவை ரத்து என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். பயண ஏற்பாட்டாளர்கள், காரில் ,சாலை வழியாக ஜோம்சம் செல்லலாம் என திட்டத்தை மாற்றி அமைத்தார்கள்.
15 நிமிடங்களில் நலுங்காமல் ஜோம்சம் சென்றிருக்க வேண்டிய நாங்கள், 9 மணிநேர பயணத்திற்க்கு ஆளானோம். கரடுமுரடான பாதை, வளைவுகள், இருட்டு, சிறிது மழை, ஒரு புறம் மலை, மறுபுறம் அதள பாதாளத்தில் கருப்பு கண்டகி ஆறு . பயமுறுத்தும் பயணம். ஏற்ற இறக்கங்கள் நம்மை குப்புற தள்ளியது. கூர்மையான வளைவுகள் நம்மை விசிறி அடித்தது. கழுத்து வலித்தது. விலா எலும்பு வலித்து. முழங்கை முழங்கால் எலும்புகள் வலித்தன. கனுக்கால் எலும்புகள் வலித்தன. கை, கால் எலும்புகள் வலித்தன. மொத்தத்தில் மனித உடம்பில் உள்ள 206 எலும்புகளும் வலித்தன. இந்த கார் பயணம் ஒரு அனுபவம். ஒரு பயங்கர அனுபவம். மார்ப்பா என்ற ஊரில் இரவு (நடு இரவு) தங்கினோம்.
நான்காம் நாள் அதிகாலை மார்ப்பாவிலிருந்து கிளம்பி ஜோம்சம் வழியாக முக்திநாத்தின் அடிவாரத்தை சென்றடைந்தோம். ஒரு மணி நேரப்பயணம். அதிகாலைக் கதிர்கள். இதமான தென்றல். கருமை வண்ணத்தில் ஜொலிக்கும் காளி கண்டகி ஆறு. அடுக்கடுக்காய் மலைத்தொடர்கள். பொன்மயமாக மின்னும் இமயமலையின் மலைத்தொடர்கள். மலைமுகட்டில் வைரமாய் ஜொலிக்கும் பனிப்பாறைகள். முதல் நாள். இரவு எந்தப் பாதை நம்மை பயமுறுத்தியதோ அதே இடங்கள் , அதே காட்சிகள் நம்மை பரவசப்படுத்தியது. பரம ஆனந்த்தை தந்தது.
முக்திநாத் கோவில் கடல் மட்டதிலிருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் உள்ளது. அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு 35 முதல் 45 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். கோவில் திவ்யதேசங்களில் ஒன்று. பெருமாள் அம்சமாக கருதப்படும் சாளக்கிராமம் இங்குள்ள கண்டகி ஆற்றில்தான் கிடைக்கிறது. பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தங்கள் பாசுரங்களால் சுவாமிக்கு மங்களாசனம் செய்துள்ளார்கள்.
பெருமாளை சேவிப்பதற்கு முன், கோவில் பிரகாரத்தில் உள்ள 108 நீர் தாரைகளிலும் கோவிலுக்கு முன் அமைந்துள்ள பாவ குளம் மற்றும் புண்ணிய குளங்களில் குளிர்த நீரில் நீராடவேண்டும். சதாரணமாக குளிர்ந்த நீரில் என்று சொல்ல முடியாது. நடுங்க வைக்கும், சில்லிட வைக்கும, உறைய வைக்கும் என்று அடை மொழியுடன் சொன்னாலும் பத்தாது. நாடி நரம்பெல்லாம் கடவுள் பக்தி உள்ளவர்களுக்கே இந்த நீரில் குளிப்பது சாத்தியம். என்னுடன் வந்தவர்கள் சர்வ சாதரணமாக நீரில் மூழ்கினார்கள். என்னுடன் வந்தவர்கள் புண்ணியம் கிடைக்கும் என்றால் அது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறாய் இருந்தாலும், பாசம் பிடித்த குளமாய் இருந்தாலும் ,குளிராய் இருந்தாலும் ,பனியாய் இருந்தாலும் ,மூன்று முக்கு போட்டு விட்டுத்தான் நிமிர்ந்து பார்ப்பார்கள். போடும் முக்குக்கு ,முன்னர் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல் இனிமேலும் எந்தத் தீங்கும் அவர்களை அண்டாமல் விலகி நிற்க்கும்.
நான் குளியல் அறையில் வெந்நீரில் குளிப்பவன். இன்னோருவர் இரண்டாம் பேருக்கே ஏன் தனக்கு கூட தெரியாமல் குளிப்பவர். ஆகையால் நானும் இன்னொருவரும் நீரை ப்ரோசனம் செய்து கொண்டோம்.
சுவாமியை பார்க்க பிரகாரத்திற்குள் வெறும் காலில் நடக்கும் போது எனக்கு காலில் சில்லிப்பு சிறிது கூட தெரியவில்லை. அமர்ந்த கோலத்தில் பெருமாள். முக்கிநாதர். இருபுறமும் ஶ்ரீதேவி மற்றும் பூதேவி. கூட்டத்தின் இடுபாடுகளுக்கு இடையே எனக்கு தெரிந்த சில பாசுரங்களை சொல்ல முற்பட்டேன். “ சிற்றஞ் சிறு காலே வந்து உன் பொற்றாமரை அடியே போற்றும்.......” , “ திருத்தக்க செல்வமும் சேவகமும்.....”, “திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்........”, கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. அவன் அருளால் அவன் தாள் கண்டேன்.
நான்காம் நாள் இரவு போக்ராவிற்கு திரும்பினோம்.
ஐந்நதாம் நாள் காலை, போக்ராவில் உள்ள “fewa” ஏரி, ஏரிக்கு நடுவில் உள்ள பகவதி கோவில் (போட்டில் செல்ல வேண்டும்), குப்தேஸ்வர் குகை கோவில் முதலிய இடங்களை பார்த்தோம். உலகின் மொத்த அழகும் கொட்டிக் கிடப்பதுபோல் ஏரி காட்சி அளித்தது. நேரமின்மை காரணமாக “Devi’s fall” பார்க்க முடியவில்லை. போக்ராவிலிருந்து சாலை வழியே மனோக் காம்னா வந்தடைந்தோம். பகவதி தரிசனம் முடிந்து தற்பொழுது கேபிள் காருக்காக வரிசையில்.
கேபிள் கார் காத்திருப்பு வரிசை மெதுவாக நகர்ந்தது. எதிர்வரிசையில் ஒரு தம்பதியர். நடுத்தர வயது. தமிழ்நாடு. தற்சமயம் ஜாகை பங்களூரில். மறுநாள் அவர்கள் போக்ராவிலிருந்து ஜாம்சம் வழியே முக்திநாத் போவதாக ஏற்பாடாம். ஜாம்சம்க்கு விமானத்தில் போகிறோம் . பதினைந்தே நிமிடப் பயணம் என்றார். எனக்கு என் அனுபவம் காரணமாக சிரிப்பு வந்தது. சிரிப்புக்கு காரணம் கேட்டார். எங்கள் விமானம் பருவநிலை காரணமாக ரத்தானதையும், காரில் செல்ல கொஞ்சம் சிரமபட்டதாகவும் சொன்னேன். அவர்களையும் காலநிலை காரணமாக விமானம் ரத்தானால் மதியத்திற்க்கு முன்பே காரில் முக்திநாத் செல்ல வலியுருத்தினேன். அவர் கிண்டலாக, “ உங்களுக்கு மலை பாதையில் போய் பழக்கமில்லை போலும் “,என்றார். அதற்கு நான், எனக்கு பாதையில் போய் பழக்கம் உண்டு”, என்றேன். மேலும் அவரிடம், “ தீப்பெட்டியில் நாலே நாலு குச்சியைப் போட்டு குலுக்கினால் தீக்குச்சிக்கு வலிக்குமா? “, என்றேன். “வலிக்காது”, என்றார். “தீப்பெட்டிக்கு பதிலாக பெரிய பெட்டியில் நாலு பேரை போட்டு குலுக்கினால் வலிக்குமா”, என்றேன். “ இடிக்குமே! வலிக்கும்”, என்றார். “எட்டு மணிநேரம் குலுக்கினால்”, என்றேன். முறைத்தபடி முகத்தை திருப்பிக் கொண்டார்.
மறுநாள் அவர் விமானத்தில் ஏறி பதினைந்து நிமிடங்களில் ஜாம்சம் அடைந்தால் அவர் பார்வையில் நான் ஒரு பயித்தியக்காரனாக தெரிவேன். விமானம் ரத்தாகி அவர கார் மூலம் ஜாம்சம் போக நேர்ந்தால் அவருக்கு நான் தான் கடவுள். அவர் ஆயிசு வரைக்கும்.
ஐந்நதாம் நாள் இரவு காட்மாண்டு ஜாகை.
ஆறாம் நாள் அதிகாலை, காட்மாண்டு பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து சிறிய விமானத்தில் ஹிமாலயாசையும் மவுன்ட எவரெஸ்ட்டையும் பறந்த படியே பார்த்தோம். ஒரு மணி நேரம் சுற்றிக் காண்பிக்கிறார்கள். விமானியின். காக்பிட் வழியே பார்க்கலாம். போட்டோ எடுத்துக் கொள்ளலாம். Simirik airlines இந்த பயணத்தை நடத்துகிறார்கள். வான்நிலை ஒத்துழைத்தால் பறக்கலாம். இயற்கையை இரசிக்கலாம்.
11 மணி அளவில் பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம். மிகப் பெரிய கோவில். ஏராளமான சன்னதிகள். பாக்மதி ஆற்றின் கரையில் உள்ளது. சிமோகாவைச் சேர்ந்த கன்னட பிராமண அர்சகர்கள். இங்கு இராவல் என்று அவர்களை அழைப்பார்கள். இந்தக்கோவில் ஒரு கலைப் பொக்கிஷம். மூலவர் பசுபதிநாத். துண்டப் பிறையானை, மறையானை, கண்டம் கரியானை காண கண் கோடி வேண்டும். சுவாமியை கை எடுத்து கும்பிடும் போது ரோமாஞ்சனம் ஏற்படுவது நிச்சயம்.
மதியம் ஜல்நாராயண், சக்திபீடம் மற்றும் தர்பார் சதுக்கம் கண்டு களித்தோம்.

Comments
Post a Comment