Kaithi movie review
கைதி திரை விமர்சனம் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் மூலம் வெளச்சத்திற்கு வந்தார். கைதி அவருக்கு இரண்டாவது திரைப்படம். முதல் சினிமா காலையில் ஆரம்பித்து நடுஇரவில் முடியும். இந்த படம் இரவில் ஆரம்பித்து இரவிலேயே முடியும். காவல்துறை கைப்பற்றிய போதை மருந்துகளை எப்படி திரும்பவும் கைப்பற்றுவது என வில்லன் கோஷ்டியும் அந்த திட்டத்தை எப்படியாவது முறியடிப்பது என காவல்துறை இன்ஸ்பெக்டரும் மோதிக் கொள்வதே கதை. கைதி ஒருவன் சூழ்நிலை காரணமாக இன்ஸ்பெக்டருக்கு உதவுகிறான். லோகேஷ் படத்தில் மூன்று கதாநாயகர்கள் முறையே பிலோமின் ராஜ், சத்தியன் சூரன், சாம். மூவரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கான்ஸ்டபில் நெப்போலியனாக வரும் George maryan பிச்சு உதறுகிறார். படத்திற்கு வசனம் தயிர் சாததிற்கு மாவடு ஊறுகாய் மாதிரி. நறுக்கு தெறிக்கிறது. வில்லன் கோஷ்டிகளை அடிக்க கார்த்தி லாரியிலிருந்து தனியே இறங்கும் போது இன்ஸ்பெக்கடர் நரேன் பதறுவார். அதற்கு கார்த்தி ,”நான் பத்து வருடம் ஜெயிலுக்கு எதுக்காக போனேன் என நினைத்தீர்கள்”, என்று கேட்டபடி வேட்டிய...