Posts

Showing posts from October, 2019

Kaithi movie review

கைதி திரை விமர்சனம் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் மூலம் வெளச்சத்திற்கு வந்தார்.  கைதி அவருக்கு இரண்டாவது திரைப்படம்.  முதல் சினிமா காலையில் ஆரம்பித்து நடுஇரவில் முடியும்.  இந்த படம் இரவில் ஆரம்பித்து இரவிலேயே முடியும்.  காவல்துறை கைப்பற்றிய போதை மருந்துகளை எப்படி திரும்பவும் கைப்பற்றுவது என வில்லன் கோஷ்டியும் அந்த திட்டத்தை எப்படியாவது முறியடிப்பது என காவல்துறை இன்ஸ்பெக்டரும் மோதிக் கொள்வதே கதை.  கைதி ஒருவன் சூழ்நிலை காரணமாக இன்ஸ்பெக்டருக்கு உதவுகிறான். லோகேஷ் படத்தில் மூன்று கதாநாயகர்கள் முறையே பிலோமின் ராஜ், சத்தியன் சூரன், சாம். மூவரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கான்ஸ்டபில் நெப்போலியனாக வரும் George maryan பிச்சு உதறுகிறார். படத்திற்கு வசனம் தயிர் சாததிற்கு  மாவடு ஊறுகாய் மாதிரி. நறுக்கு தெறிக்கிறது. வில்லன் கோஷ்டிகளை அடிக்க கார்த்தி லாரியிலிருந்து தனியே இறங்கும் போது இன்ஸ்பெக்கடர் நரேன் பதறுவார்.  அதற்கு கார்த்தி ,”நான் பத்து வருடம் ஜெயிலுக்கு எதுக்காக போனேன் என நினைத்தீர்கள்”, என்று கேட்டபடி வேட்டிய...

Nepal Pilgrimage

நாங்கள் நேபாளத்திறகு ஆன்மீகச் சுற்றுலா வந்த ஐந்தாம் நாள். மனோக்காம்னா  கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, மாலை 7 மணி அளவில் மலையிலிருந்து கீழே இறங்க கேபிள் காருக்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருந்தோம். மனோக்காம்னா, காட்மாண்டுவிற்கும் போக்ரா என்ற ஊருக்கும் நடுவில் உள்ளது. மனோக்காம்னா கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.3 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2.8 கிலோமீட்டர் கேபிள் காரில் செல்ல வேண்டும். 10 நிமிடத்தில் கோவிலை அடைந்து விடலாம்.  ஒரு கேபிள் காபினில் 6 பேர் அமரலாம். சுமார் 600 நபர்களை ஒரு மணி நேரத்தில் ஏற்றி இறக்குகிறார்கள். ஆசியாவிலேயே மிக பெரிய கேபிள் கார் சேவை வசதி இதுவாகும். 1998ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டார்கள்.  எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் கேபிள் சேவை நடைபெற தினமும் ஒரு ஆட்டை பலி கொடுக்கிறார்கள்.  அடுத்த நாள் பலியாக வேண்டிய ஆடு “மே” என்று கத்தாமல் “ஙே” என்று விழித்துக்கொண்டிருந்தது. கோவிலுக்கு  சின்னதாக ஒரு கதை இருக்கிறது.  கூர்கா  ராஜாவின் ராணி ,அம்பாளின் அவதாரம். ராஜாவுக்கு இந்த விஷயம் தெரியாது. லக்கன் தாபா என்ற பக்தனுக்குத் ...